நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, மோதலை திட்டமிட்டு முன்னெடுத்ததாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் கைதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
