Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விற்பனை செய்த உரிமையாளர் கைது

புரட்டாதி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மருத்துவப் பரிந்துரையின்றி மயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹெம்மாத்தகம, கம்பளை சந்திப் பகுதியில் உள்ள மருந்தகமொன்றின் உரிமையாளரான 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், போதைப்பொருள் மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் மத்தியில் “பெத்தி அக்கா” என அழைக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் மற்றும் ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குணரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் பரிசோதகர் சமன் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரினால் உத்தி நடவடிக்கைக்காக பொதுமகன் ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு 500 ரூபாய் பணம் வழங்கப்பட்டு, மருத்துவப் பரிந்துரைச் சீட்டின்றி மயக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வகையிலான மாத்திரைகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு மருத்துவப் பரிந்துரையின்றி குறித்த மாத்திரைகளை விற்பனை செய்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவனெல்ல, கம்பளை, அரநாயக்க, ஹோரேவல மற்றும் திப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் நபர்களை அனுப்பியும், சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தானே மோட்டார் சைக்கிளில் சென்று மாத்திரைகளை விநியோகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெம்மாத்தகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு 25 மில்லியன் ரூபா வட்டியில்லா கடன் வசதி

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 உயர்தரப் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு பறிமுதல்; 9 மீனவர்கள் கைது

ஆவணி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் நீடிக்கும் பதற்றம்!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube