பேராதனை சிறுவர் மருத்துவமனை மருத்துவர்கள், இடுப்புப் பகுதியில் ஒட்டிப்பிறந்த லினுலி மற்றும் லிதுலி என்ற இரு பெண் குழந்தைகளை 20 மணி நேர அறுவைச் சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.
இரு குழந்தைகளுக்கும் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை மாற்றிப் பொருத்திய இந்த அறுவைச் சிகிச்சை, ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் போது சிறுநீரக மாற்று செய்யப்பட்ட உலகின் முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. தற்போது இரு குழந்தைகளும் நலமுடன் குணமடைந்து வருகின்றனர்.
