நெல் சந்தைப்படுத்தல் சபையினால் எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, தற்போதைய காலப்பகுதியில் அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களை மையமாகக் கொண்டு நெல் களஞ்சியசாலைகளைத் திறந்து, நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் பெருமளவில் ஆரம்பமாகியுள்ளதால், அந்தப் பிரதேசங்களை மையப்படுத்தி முதற்கட்டமாக நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
