தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் மாணவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு கேலிக்குள்ளானதைத் தொடர்ந்து, பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி மாணவர்களை நேர்காணல் செய்து கருத்துகளை பதிவு அல்லது ஒளிபரப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள் தொடர்பான விதிமுறைகளை மீறும் வகையில் காணொளிகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
