Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகை கடலட்டைகளுடன் 26 பேர் கைது!

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய கடலட்டைகளுடன் 26 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 60, 448 கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கடல் அட்டைகள் சௌத்பார் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 26 கடற்றொழிலாளர்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் வருணவின் சகா போதைப்பொருளுடன் கைது!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில்

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
இலங்கைவிளையாட்டு

T20 தொடரை சமன் செய்தது இலங்கை: 2ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 37 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube