Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை – ஐவர் கைது!

#Jaffna #SriLanka #BreakingNews #CrimeNews #Kidnapping #Abduction #Torture #Arrest #Police

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழிப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

யாழ் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி இளைஞன் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல் அவ் இளைஞனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை வேறு ஒரு இடத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அவதானித்த சோதனை சாவடியில் இருந்த பொலிஸார், நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும் அந்த கார் சோதனை சாவடியில் நிறுத்தாமல் வேகமாக பயணித்துள்ளது.

இதனையடுத்து அந்த காரை பொலிஸார் துரத்திச் சென்று இடைமறித்து சோதனையிட்ட போது, அதில் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.

இதையடுத்து பொலிஸார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைய கடத்தலுடன் தொடர்புடைய இளைஞனும் மீட்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை பலத்த மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 – 40 ரூபாய் வரை உயரக்கூடும் – கெமுனு விஜேரத்ன!

ஆனி 26, 2026
இலங்கை

இலங்கைக்கே உரித்தான எலி இனம் கண்டுபிடிப்பு!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube