உள்நாட்டில் உற்பத்தியாகும் அரிசியை உணவாக மட்டுமன்றி பியர், கால்நடை தீவனம் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட பிற உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரிசியை உணவல்லாத பொருட்களுக்கு பயன்படுத்துவதைத் தடை செய்திருந்த வர்த்தமானி அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நெல் விவசாயிகளுக்கு அதிக சந்தை வாய்ப்புகளும் நியாயமான விலையும் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
