சுற்றுலா பொலிஸார் என போலியாக நடித்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து 30 இலட்சம் ரூபாய் பணம் கோரிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி தல்பே பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணியிடம் கடவுச்சீட்டு, ஆவணங்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்து, கொழும்பிலுள்ள உயர் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறி பணம் கோரியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
