நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, பேராதனை நகருக்கு அருகில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்ற 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 400 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், 150 கிராம் ஹெரோயினும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
வெரலபட- ஹின்னிஅப்புஹாமி மாவத்தையில் வெரலபட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 119 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
