Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ராகலை குடும்பங்களுக்கு மீண்டும் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. ஜீவன்!

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ராகலை நடுக்கணக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு மீண்டும் அதே காணி மற்றும் வீடுகளை வழங்குவதில் எந்தச் சட்டத் தடையும் இல்லை என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வசித்து வந்த இந்தக் குடும்பங்கள், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டமை மலையக மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

தங்களது சொந்த நிதியில் வீடுகளை அமைத்த குடும்பங்கள் தற்போது நிர்க்கதியான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் காணியை மீண்டும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே வழங்குவதற்கு சட்டரீதியான தடையில்லை என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே, மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீண்டும் காணியும் வீடுகளும் வழங்க அரசாங்கமும் காணி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை புவிசார் அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சஜித் பிரேமதாச

வைகாசி 29, 2026
இலங்கை

மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்திய வாகனங்களுக்கு கடும் நடவடிக்கை!

ஆனி 12, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தா?

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube