Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆக்ரோயா ஆற்றில் காணாமல் போன 15 வயது மாணவன் சடலமாக மீட்பு

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொத்மலை – ஆகுரோயா ஆற்றில் காணாமல் போன மாணவன் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை தோற்றிவிட்டு, 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே ஒரு மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஊர்மக்கள் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்ட போதும் மாணவனை கண்டுபிடிக்க முடியாதநிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய தினம் (14) நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் , மற்றும் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது காணாமல் போயிருந்த மாணவன் சடலமா மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வழிகாட்டிகள் ராஜபக்ஷர்களே – விதர்ஷன கன்னங்கர!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிறந்தநாள் விழா மோதலில் ஒருவர் உயிரிழப்பு – முக்கிய சந்தேக நபர் கைது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube