Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 20 பிக்குகளும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்கள்!

Buddhist Monks | Drug trafficking | Police Investigation | Court Judgment | Srilanka | Quick Tamil News

சித்திரை 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கிலோகிராம் போதைப் பொருளுடன் கைதான பிக்குகள் 20 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 22 பிக்குகளும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது.

அதேநேரம், கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் புத்தசாசன அமைச்சில் இன்று (28) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கக்கோவை – வெளியிடப்பட்டது புதிய வர்த்தமானி!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube