Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற ஸ்பெயின் அணி

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

FIFA உலகக்கிண்ண கால்பந்து 2026 செம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

டெக்சாஸின் ஆர்லிங்டனிலுள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன், பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.

நடப்புத் தொடரில் பிரான்ஸ் அணி முதல்முறையாக எந்தவொரு கோலையும் பெறாமல் பின்தங்கியமை இந்தப் போட்டியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தனது வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பிரான்ஸின் தாக்குதல்களை முறியடித்த ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

IMF பிரதிநிதிகள் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற மாத்திரைகள் இந்தியாவில் பறிமுதல்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 357 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube