Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

“யாரவது ஒருவர் ட்ரம்பின் தவறுகளை உரக்கச் சொல்லத்தான் வேண்டும்” – ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ பதிலடி!

சித்திரை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரான் போர் விவகாரத்தில் வத்திக்கான் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து போப் லியோ XIV தனது அதிரடியான பதிலை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், அவர் ஒரு “தீவிர இடதுசாரி” போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார்.

மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அல்ஜீரியா செல்லும் விமானத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, போப் லியோ புன்னகையுடன், “அவர் கருத்துத் தெரிவித்த அந்தத் தளத்தின் பெயரே முரணாக உள்ளது. அதற்கு மேல் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை,” என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

“ட்ரம்ப் நிர்வாகத்திற்கோ அல்லது சுவிசேஷத்தின் செய்தியை உரக்கச் சொல்வதற்கோ நான் பயப்படவில்லை. அதுவே எனது பணி,” என்று போப் திட்டவட்டமாகக் கூறினார்.

தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும், ட்ரம்ப்புடன் தனிப்பட்ட விவாதத்தில் ஈடுபடத் தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுவிசேஷத்தின் செய்தி சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

ரோம் நகரிலிருந்து அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நான்கு நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக போப் லியோ புறப்பட்டுள்ளார்.

“உலகில் இன்று பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், பலர் துன்பப்படுகிறார்கள்.அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்கும் ஒரு சிறந்த வழி இருக்கிறது என்பதை யாராவது ஒருவர் உரக்கச் சொல்லித்தான் ஆகவேண்டும்,” என்று அவர் தனது பயணத்தின் நோக்கத்தை விளக்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை

ஆடி 22, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இனி பிரிட்ஜ்க்குள் இருக்கலாம் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

ஆடி 22, 2026
உலகம்

60 நாள் அமைதி ஒப்பந்தம்: ஈரான் – அமெரிக்க உயர்மட்ட பேச்சு நிறைவு!

ஆனி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் தனது வான்பரப்பு மற்றும் விமான நிலையங்களை மூடியது!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube