Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வெசாக் வாரத்தில்” பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் குறித்து சுற்றுநிருபம்!

Wesak week | Schools | Collages | New circulation program | Ministry of Higher Education | Vocational Education | Srilanka | Quick Tamil News

சித்திரை 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, “வெசாக் வாரத்தில்” பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய சுற்றுநிருபத்தில்,
வெசாக் வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளில் விசேட ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வெசாக் தினம் மே மாதம் 30ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் இணைந்து நடத்தும் அரச வெசாக் உற்சவம் மே மாதம் 27ஆம் திகதி மாத்தறை – திஹகொட, மிதெலவல புராதன விகாரையில் நடைபெறவுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முன்மாதிரித் திட்டங்களை அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. அந்தந்த பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான முறையில் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சின் இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை களஞ்சிய பகுதியில் பாரிய தீ விபத்து!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வளர்ச்சிப்பாதையில் – மங்கள விஜேசிங்க

ஆனி 24, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தனது போராட்டத்தை நிறைவு செய்தது!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube