Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

துப்பாக்கி மிரட்டல் விடுத்ததற்காக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அருச்சுனா இராமநாதனை  அழைத்து , வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் , அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை ,மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

அதேவேளை , குறித்த சம்பவத்தில்  தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து , தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அருச்சுனாவுடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய வேளை,  பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .

அதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும் , குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றுக்கு சுட்டிக்காட்டிய போது , குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் இணையவழிக்கு மாற்றம்!

ஆடி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புங்குடுதீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிப்பிட்டியவில் தீவிபத்து – 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆனி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி மோசடி: வெள்ளவத்தை நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube