Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 ஈரானிய மாலுமிகள் விடுவிப்பு!

United States Navy | 6 sailors | Iran | Released | World News | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்கக் கடற்படையினரால் ஓமான் வளைகுடாவில் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த6 sailors விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி, ஈரானின் கொடியுடன் பயணித்த ‘தூஸ்கா’ என்ற கொள்கலன் கப்பலை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் சிறைபிடித்தது.

அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை உத்தரவுகளைப் பின்பற்ற குறித்த கப்பல் மறுத்ததால், ஓமான் வளைகுடாவில் வைத்து அது கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இந்தக் கப்பலில் மொத்தம் 28 ஈரானிய மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் 06 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 22 பேரையும் விடுவிக்க கோரி ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள ஆரம்பித்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் போர் மூண்டது. இதற்குப் பதிலடியாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதுடன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது.

பாகிஸ்தானின் இடைத்தரகர் முயற்சியால் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ஈரானிடமிருந்து புதிய யோசனைகள் வரும் வரை, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திகதி முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானியக் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா கடும் கடல்வழி முற்றுகையை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்..

ஆவணி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

மரபணு பரிசோதனை விண்ணப்பம் நிராகரிப்பு

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube