Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எபோலா வைரஸ் தொடர்பில் அவதானம் – விமான நிலையங்களில் நோய் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவிப்பு!

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று காரணமாக, உலக நாடுகள் அவசர நிலைக்குத் தயாராக வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளதுக்குஅறிவித்ததற்கு அமைவாக, நாட்டுக்கு வருகைத்தரும் பயணிகளை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது அவசியம் என, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமில் சஞ்சீவ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளான கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் தற்போது வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன் செயற்படுவது அவசியம். இந்த நோய் ஆப்பிரிக்க பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளுக்கு வேகமாகப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் சுகாதார ஸ்தாபணம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்நா நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்நாட்டுப் பிரஜைகளை விமான நிலையத்தில் வைத்து முறையான கண்காணிப்புக்கும் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். உங்களது உறவினர்களோ அல்லது நண்பர்களோ இந்த நாடுகளிலிருந்து இலங்கை திரும்பியிருந்து, அவர்களுக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படின், உடனடியாக முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்ததொற்றுக்கு இதுவரை நிலையான மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால், உலக சுகாதார ஸ்தாபனம் இதன் பரவல் குறித்து தீவிர அவதானம் செலுத்தி வருகின்றது.

கடந்த காலங்களில் எபோலா வைரஸ் உலகளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும், தற்போதைய வைரஸ் பரவலானது கோவிட்-19 வைரஸ் போன்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகள் விமான நிலையங்களில் முறையான பரிசோதனை, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு பரணிலிருந்து 3 வயது குழந்தை மீது விழுந்த தந்தை – குழந்தை உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘யாழ் தேவி’ மீண்டும் நாளை முதல் சேவையில்!

வைகாசி 10, 2026
இலங்கை

நாணயமாற்று விகிதம்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube