Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனங்கயா’ டெலிகிராம் குழு சிக்கியது.!

insta|tele|quicktamilnews|update|girls

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டெலிகிராம் குழுவை பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை Criminal Investigation Department (CID) கைது செய்துள்ளது.

அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள்இ மேலும் சிலரின் தனிப்பட்ட படங்கள் என்பன விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில் தெரியவந்ததாவது, ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாக உரையாடி, பின்னர் அவர்களின் படங்களை மாற்றியமைத்து (edit செய்து) மீண்டும் அவர்களுக்கே அனுப்பி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மேலும் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தனது அடையாளத்தை மறைக்க, டெலிகிராம் கணக்குகளில் உண்மையான பெயர் அல்லது படம் பயன்படுத்தாமல், அழைப்புகளும் வராதவாறு அமைப்புகளை மாற்றியமைத்திருந்தார்.

பயம் மற்றும் அவமானம் காரணமாக பல இளம் பெண்கள் புகார் அளிக்க முன்வராமல் இருப்பதாகவும், இதன் மூலம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிபில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை cidயின் கணினி குற்றப்பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமலுக்கு பிணை – வெளிநாடு செல்லவும் தடை

ஐப்பசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சில பகுதிகளில் நாளையும் பலத்த மழை

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.ம.சக்தியின் ஆர்ப்பாட்டத்தால் பத்தரமுல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

புரட்டாதி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை முதற்கட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube