Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை மாவட்டத்தில் 70 விளையாட்டு கழகங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Kalutura District | Sports clubs | 50 thousand | Sports equipment | Srilanka | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களுத்துறை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 70 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (01) களுத்துறை மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மேல் மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ், களுத்துறை மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, மத்துகம, பண்டாரகம, பேருவளை, ஹொரணை, மதுவளை, மில்லனியா, அகலவத்தை, களுத்துறை, வலல்லவிட்ட, பாலிந்தநுவர, தொடங்கொட, பாணந்துறை, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 70 கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன.

ஒவ்வொரு விளையாட்டுக் கழகத்திற்கும் தலா 50,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நந்தன பத்மகுமார, ஒஷானி உமங்க, சஞ்சீவ ரணசிங்க, சந்திமா ஹெட்டியாராச்சி, தனுஷ்க ரங்கநாத், நிலாந்தி கொட்டஹாச்சி மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர் ஜி.எம்.ஜானக கே.குணவர்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

ஆனி 13, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஜப்பான் விமான போக்குவரத்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் ரோபோக்கள்!

சித்திரை 29, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தையிட்டி விகாரையைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு பிணை!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube