Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

22 youths | Arrested | Reckless motorcycle stunt show | Malabe | Srilanka | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீதியில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இளைஞர் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்துவதாக கடுவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இளைஞர்கள் வாட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக ஒன்றிணைந்து இந்த சாகச நிகழ்வைத் திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், இலங்கையில் பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவெல பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தற்போது பொலிஸார் பிணையில் விடுவித்துள்ள நிலையில், எதிர்வரும் 05ஆம் திகதி அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தந்தைக்கு 2 இலட்சம் ரூபா சம்பளம் கொடுக்கும் 16 வயது மகன்

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான கட்டளை எதிர்வரும் 14ஆம் திகதி!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube