Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

இந்தியத் திரைத்துறையின் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா

ஆடி 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள், புதுடெல்லியில் உள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சினால் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதுகளில், தமிழ் திரையுலகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

பிரபல மலையாள இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட நடுவர் குழு, சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து இந்த விருதுகளை அறிவித்துள்ளது.

தமிழ் படங்களுக்கான முக்கிய விருதுகள் விபரம்:

அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம், சிறந்த தமிழ் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசைக்கான விருது, அமரன் திரைப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெய்யழகன்’ திரைப்படத்துக்காக, ஒலிக்கலவை கலைஞரான சுரேனிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சமூக அக்கறைக்கான தேசிய விருது கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படமாக ஆர்ட்டிகள் 370 தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏனைய சில விருதுகள்

சிறந்த நடிகர் – மம்மூட்டி (பிரம்மயுகம்), கார்த்திக் ஆர்யன் (சந்து செம்பியன்)

சிறந்த நடிகை – யாமி கௌதம் (ஆர்ட்டிகள் 370)

சிறந்த சண்டை பயிற்றுவிப்பாளருக்கான விருது – அனல் அரசு (மகாராஜா)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – புஷ்பா 2

சிறந்த துணை நடிகை – சாச்சனா நமிதாஸ் (மகாராஜா)

சிறந்த படத்தொகுப்பாளர் – கலைவண்ணன் (அமரன்)

சிறந்த திரைக்கதை, வசனம் – வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர் தெலுங்கு)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – கல்கி 2898 AD (தெலுங்கு)

திரைப்படப் பிரிவு (மொழி வாரியான விருதுகள்)

சிறந்த மலையாளத் திரைப்படம்: ஃபெமினிச்சி பாத்திமா (பாசில் மொஹமட்)

சிறந்த மணிப்பூரித் திரைப்படம்: சுனிதா (யுனம் அஜித் சிங்)

சிறந்த மராத்தித் திரைப்படம்: முக்காம் போஸ்ட் பொம்பில்வாடி (பரேஷ் மோகாஷி)

சிறந்த ஒடியத் திரைப்படம்: லஹரி (அமர்த்ய பட்டாச்சார்யா)

சிறந்த தமிழ்த் திரைப்படம்: ராயன் (தனுஷ்)

சிறந்த தெலுங்குத் திரைப்படம்: கமிட்டி குரோலு (யது வம்சி)

சிறந்த கார்வாலித் திரைப்படம்: தோலி (தினேஷ் பி. போன்ஸ்லே)

சிறந்த துளுத் திரைப்படம்: இம்பு (சிவத்வாஜ் ஸ்டுடியோ)

இந்தத் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரையுலகின் சிறந்த படைப்புகள், திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

‘விக்ரம்-1 ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

64 புறாக்களை பயணப்பெட்டிகளில் வைத்து கடத்த முயற்சித்த இருவர் கைது

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆவணி 29, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பல வருடங்களின் பின்னர் நிகழும் “ப்ளூ மூன்” – இன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பார்வையிடலாம்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube