Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூத்த பிக்கு!

Buddist Monk | 14 years Old Girl | Abuse | Anuradapura | Srilanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல் செல்வாக்குள்ள, மூத்த பிக்கு ஒருவரால் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (04.05.2026) அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, சிறுமியின் தாயாரே 1 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அந்தப் பிக்குவிடம் சிறுமியை ஒப்படைத்ததாகச் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த வழக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பிக்குவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டு, வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது மற்றும் பொலிஸாரின் மெத்தனப் போக்கு குறித்துப் பல தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் முறையாக விசாரணை நடத்திச் சந்தேக நபர்களைப் பெயரிடத் தவறினால், வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றப்படும். அவ்வாறு நிகழும் பட்சத்தில், சட்ட ஆலோசனைகளைப் பெற 4 முதல் 5 ஆண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் உருவாகலாம் எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயன்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சீட்பெல்ட் அணியாததால் சுமார் 400 பேருக்கு சட்ட நடவடிக்கை!

ஆனி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவை விரைவில் மீளும்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய மின் கட்டமைப்பை பாதுகாக்க சூரிய கலங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube