Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம் – பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது

செப்டம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தெஹிவளையில் வீடொன்றுக்குள் கைக்குண்டு வீசி இரு சிறுவர்களைக் கொலை செய்து, அவர்களின் தந்தைக்கு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் மேல் மாகாணத் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (17) ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவை ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23, 30 மற்றும் 39 வயதுடையவர்களாவர்.

ரிதீமாலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், கடந்த ஆகஸ்ட் 01 ஆம் திகதி கல்கிஸ்ஸ, கந்தவல வீதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவின் தலைவரால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இக் குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 26

ஜூன் 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்ப்பின் முகம்

ஏப்ரல் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

மே 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நவகமுவ துப்பாக்கிச் சூடு: இருவர் கைது!

ஜூலை 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube