Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கைதி கொலை வழக்கின் விசாரணை இன்று!

Welikada Prison | Prisner | Murder | Court Case | Accused | SriLanka | QuickTamilNews

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘மஞ்சு’ எனப்படும் கைதி, அதிகாரிகள் குழுவொன்றின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று புதன்கிழமை (6) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இலக்கம் 2இல் இடம்பெற்றது.

இதன்போது நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தளகஸ்வத்தகே சம்பத் குஷான், மீகஹகே டொன் சுரேஷ் தர்ஷன பெரேரா மற்றும் திஸாநாயக்க முதியன்சேலாகே உபுல் திஸாநாயக்க ஆகிய மூன்று அதிகாரிகளுமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவ்வழக்கில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 சாட்சியாளர்களும் வெவ்வேறு மட்டங்களில் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியதுடன், அவர்களில் நால்வர் 3 அதிகாரிகளையும் துல்லியமாக அடையாளம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.பி. துஷார சம்பத் (38) எனப்படும் ‘மஞ்சு, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது சிறை அதிகாரிகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இச்சம்பவத்தில் மற்றொரு கைதியும் காயமடைந்திருந்தார். இது தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், குறித்த மூன்று அதிகாரிகளும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனக்க பெரேரா, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சந்தேகநபர்களுக்குப் பிணை அவசியமெனில் அவர்கள் மேல்நீதிமன்றிலேயே பிணை மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் சந்தேக நபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் வெப்ப அலையினால் தென்னிந்தியப் பகுதியில் 16 பேர் உயிரிழப்பு!

வைகாசி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உறுதியுடன் நிற்போம் – ஈரான்

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்டிடப் பகுதி இடிந்து வீழ்ந்து விபத்து: 3 மாணவிகள் படுகாயம் ​

வைகாசி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube