Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல் : உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!

update|fuel|quicktamilnews

வைகாசி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.64 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 102.7 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 3 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய இராணுவத் தளங்கள் மீது “தற்காப்புத்” தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே தாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு உட்பட வளைகுடா கடலோரப் பகுதிகளில் பல வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) அருகே ஈரானிய ஆயுதப் படைகள் எதிரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கிடையில், போர் நிறுத்தம் இன்னும் அமுலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

ஈரானிய ஜனநாயக ஆர்வலர் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு நாடு கடத்தல்!

ஆனி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு அதிகரிப்பு!

சித்திரை 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் உலகக்கிண்ண வரலாற்று சாதனை!

ஆனி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ நாட்டவர்களுக்கு கடனாவில் நுழைய தடை!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube