தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாகத் தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 2 இடங்கள் தேவையாக இருக்கும் நிலையில், விசிக ஆதரவையும் தவெக கோரியுள்ளது.
இழுபறியில் இருக்கும் விஜயின் பதவிப்பிரமாணம் எப்போது என தமிழ்நாட்டு மக்கள் மாத்திரமின்றி, முழு உலகமும் எதிர்பாத்திருக்கின்றது. இந்நிலையில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட பெயராக விஜய்யின் பெயர் இடம்பிடித்துள்ளது.
ஏப்ரல் 8 முதல் மே 8, 2026 வரையிலான கடந்த 30 நாட்களின் Google Trends தரவுகளின்படி, விஜய் குறித்த தேடல் இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் திகதி முதல் ,அதாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளான ஏப்ரல் 23-ஆம் திகதியன்று இந்தத் தேடல் மேலும் உச்சத்தை எட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளான மே 4, திகதியன்று இரண்டாவது முறையாகத் தேடல் அதிகரித்துள்ளது. அந்நாளில் மக்கள் விஜய் மற்றும் அவரது கட்சி தொடர்பான செய்திகளை மிகவும் தீவிரமாகத் தேடியுள்ளனர். இந்நிலையில் இப்போது விஜய்யின் பதவியேற்பு எப்போது என்ற தேடலில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
