Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தடைகளை கடந்து நாளை தமிழக முதல்வராகிறார் ஜோசப் விஜய்!

TamilNadu | CM | Joseph Vijay | India| QuickTamilNews

வைகாசி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எண்ணிக்கையை தவெக கடந்த நிலையில், இன்று இரவு தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மற்றும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை சந்தித்திருந்தார்.

ஆளுநரின் சந்திப்பில், நாளையே ஆட்சி அமைக்க தவெக தரப்பில் இருந்து கோரியதை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறதுகொண்டுள்ளார். இந்தசூழலில் தான், தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவிருக்கிறார். இதற்கான, பதவியேற்பு விழா சென்னையில் உள்ள நேரு உள்ளக விளையாட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராக நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ள நிலையில், விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடரில் மாற்றம்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பஸ் விபத்து – கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்! ​

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண வங்கி மோசடி: உதவி முகாமையாளர் விளக்கமறியலில்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன பிரஜைகள் கைது!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube