முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டிடமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்த கைதி, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
