Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

Narcotics | Indian | Katunayaka Airport | Police | Srilanka | QuickTamilNews

வைகாசி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுமார் 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 60 வயதுடைய இந்தியப் பிரஜை எனவும் அவர் ஒரு புவியியலாளர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உகண்டாவின் கம்பாலா நகரில் இருந்து கட்டாரின் டோஹா நகருக்குச் சென்று, அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம் இன்றைய தினம் காலை 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் கிரீன் சேனல் ஊடாக போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்ற போதே, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இவர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்த இரண்டு சான்றிதழ் கோர்ப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோகிராம் 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெணியாய கல்வி வலய 4 பாடசாலைகள் நாளை (மே 8) மூடப்படும்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ‘WEAIR’ புதிய சரக்கு விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி கொள்வனவு முறைகேடு!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை களஞ்சிய பகுதியில் பாரிய தீ விபத்து!

வைகாசி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube