Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி வாகனங்களின் விலை 10% உயர்வடையும் வாய்ப்பு!

Import Vehicles | Price Increase | Srilanka | QuickTamilNews

வைகாசி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவில் உயர்வடையும் என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது,

டொலரின் பெறுமதி உயர்வு, சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் ஆகிய காரணங்களால் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அங்கு அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்ததாவது,

இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு வரி தொகையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஹய்பிரிட் டொயோடா ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி 30 இலட்சமாக காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தத்துக்கமைய அந்த வரி 63 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 140 இலட்சம் ரூபா பெறுமதியான ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி 8 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரையில் உயர்வடையும்.

அதேபோல் யாரிஸ் ரக வாகனத்தின் உதவுத்தொகை வரி 4 அல்லது 5 இலட்சத்தாலும், வெசல் ரக காரின் உதவுத்தொகை வரி 12 இலட்சத்தாலும், லேன்ட் க்ரய்சர் காரின் உதவுத்தொகை வரி 30 இலட்சத்தாலும் உயர்வடையும்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சகல வாகனங்களின் விலைகளும் 10 சதவீதமளவில் உயர்வடையும். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வார காலப்பகுதிகளில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வடையும் என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணிக்கு எதிராக இலங்கை ஆதிக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம்!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

புரட்டாதி 23, 2026
இலங்கைவானிலை

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube