Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50% சுங்கவரி!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீதம் கூடுதல் வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களின்படி, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது, மேலும் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு இன்று சனிக்கிழமை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடுத்த 3 மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நேற்று வெள்ளிக்கிழமை (15) அல்லது அதற்கு முன்னர் நாணய கடிதங்கள் திறக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50 சதவீத கூடுதல் சுங்க வரி விவகாரம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை கருத்திற்கொண்டே இந்த தற்காலிக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஆவணி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு மீளாய்வு

புரட்டாதி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 132 பேர் பலி!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube