கம்பளை பகுதியில் வீட்டு பரணிலிருந்து தந்தையொருவர் தடுமாறி 3 வயதுடைய குழந்தை மீது விழுந்ததில் குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கம்பளை, நாரன்விட்ட – ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
தமது மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கு தண்ணீர்க் குழாய் ஒன்றை எடுப்பதற்காக தந்தை பரண்மேல் மேலே ஏறியபோது தவரி வீழ்த்துள்ளார். இதன்போது கீழே நின்றிருந்த தனது மகன் மீதே தந்தை தவறி வீழ்ந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் உடனடியாக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த தந்தை கம்பளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
