Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசேட போக்குவரத்துத் திட்டம்!

Special| traffic|Parliament

வைகாசி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவுத் தின பிரதான விழா இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

இவ்விழா நடைபெறும் காலப்பகுதியில் நாடாளுமன்ற வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, இன்று பிற்பகல் 3:30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப பின்வரும் மாற்று வீதிகளுக்குத் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள், பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன மற்றும் கியஹேம் சந்தி ஊடாகத் தங்களது பயணத்தைத் தொடர முடியும்.

கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள்: கியன்னெம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழைய வரும் வாகனங்கள் பாலன்துன மற்றும் பத்தரமுல்லை ஊடாகத் திருப்பி விடப்படும்.

ரஜமல்வத்தை திசையிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள், பத்தரமுல்லை வீதியை அடைந்து அங்கிருந்து தங்களுக்குத் தேவையான வீதியைப் பயன்படுத்த முடியும்.

பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளை நிறுத்துவதற்கான இடங்கள் ஜப்பான் நட்பு வீதிச் சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை.

ஜப்பான் நட்பு வீதி மின்சார சபை வளாகத்திற்கு அருகில் இருந்து பெலவத்தை வரை.

எனவே, இந்த நேரப்பகுதியில் நாடாளுமன்ற வீதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகன ஓட்டிகள், ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக இந்த மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உழைக்கும் மக்களை முதன்மை சக்தியாக நாம் நம்புகிறோம் – ஜனாதிபதி

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபர்கள் கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீத இன்று தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube