Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள சமீரா மஹ்பூப்டீனினை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்!

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தை கவனத்தில் எடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில்,அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை இஸ்ரேல் கைப்பற்றி, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.

இந்தப் படகுகளில், எமது நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் உள்ளார். சுமார் 45 நாடுகளிலிருந்து நானூறு மனிதாபிமான பணியாளர்கள் இப்படகுகளில் பயணித்திருந்தனர்.

மனிதாபிமானம் மற்றும் அமைதியான நோக்குகளுடன் மாத்திரமே இவர்கள் காசாவுக்கு புறப்பட்டனர். எவ்வித அசம்பாவித நோக்கங்களுமின்றி பயணித்த இந்தப் படகுகள் காசாவிலிருந்து 250 கிலோமீற்றர் தூரத்திலான கடற்பரப்பில், இடைமறிக்கப்பட்டது.

இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இதுவரைக்கும் எவ்வித தகவல்களையும் வௌியிடவில்லை. எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியாதுள்ளது.

எமது நாட்டைச் சேர்ந்த மனிதாபிமானப் பணியாளரான சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலம் குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவரைத் தொடர்புகொள்வதற்கான எந்த வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை.

எனவே, சட்டரீதியான ஏற்பாடுகளுடன் சமீரா மஹ்பூப்டீனை விடுவிப்பதற்கான ராஜதந்திர செயற்பாடுகளில் அரசாங்கம் அவசரமாக ஈடுபட வேண்டும்.

இஸ்ரேலின் இவ்வாறான செயற்பாடுகள், மனிதாபிமானத்துக்கே கேடாக அமைந்துள்ளது. அமைதிச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது, மனிதாபிமானத்தை மலினப்படுத்துவதாகவே அமையும். இவ்வாறு ரிஷாட்பதியுதீன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

யாழில்வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஷாரா செவ்வந்தி 30 நாட்கள் தடுப்புக் காவல்

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித மற்றும் பாட்டிக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 31

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருக்கோவிலில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில்

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube