பண்டாரவளை அம்பதண்டேகம களுவல, உடராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று மாலை நீராடச் சென்றிருந்த நான்கு பாடசாலை மாணவர்களில் ஒருவர் கால் வழுக்கி சுமார் 40 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நீந்தத் தெரிந்த மற்றொரு மாணவர் உடனடியாக பள்ளத்தில் இறங்கி, குறித்த மாணவரை மீட்டு முதலுதவி வழங்கியுள்ளார்.
பின்னர் காயமடைந்த மாணவர் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, காயமடைந்த மாணவரை மேலே கொண்டு வருவதற்காக 1990 அவசர சேவை அதிகாரிகள், மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சுமார் இரண்டு மணி நேரம் கடும் சிரமத்திற்கு பின்னர் மாணவரை மீது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
