நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
