லண்டனில் இன்று ஆரம்பமாகிய ‘கற்றலுக்கான பொதுநலவாய’ அமைப்பின் 43ஆவது ஆளுநர் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு கட்டமாக இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் காலநிலை மாற்றம், காலநிலை நிதி, ஜனநாயக ஆட்சிமுறை, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன. அத்துடன், நிலையான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், பொதுநலவாய செயலகத்தின் தொடர்ச்சியான ஆதரவையும் பாராட்டினார்.
இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், காலநிலை நிதி மற்றும் தேர்தல் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகப் பொதுநலவாய பொதுச் செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.
