Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரி – உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்லெல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், அப்பகுதியில் வசித்துவந்த 12 குடும்பங்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு முதன்முறையாக மண்சரிவு அடையாளங்கள் கண்டறியப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் நடத்திய கள ஆய்வின் பின்னர், இப்பகுதி “மண்சரிவு ஏற்படும் அதிக அவதானமிக்க பகுதி”யாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே, நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை 6:30 மணியளவில் இந்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து, அனர்த்த அபாயம் இருந்த பகுதிகளில் வசித்த குடும்பங்கள் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டவானில் முச்சக்கர வண்டி விபத்து!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மெதடிஸ்ட் தேவாலய காணி சர்ச்சைக்கு தீர்வை பெற்றுத்தரும்படி போராட்டம்!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றைய வானிலை

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube