மருதானையிலிருந்து இலிருந்து ஹிக்கடுவ நோக்கி தினமும் மாலை 6.10 மணிக்கு புறப்படும் கடுகதி ரயிலின் எஞ்சின் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் மருதானையில் தடம் புரண்டுள்ளது.
ரயில் முனையத்திலிருந்து மேடையில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டிகளுடன் இணைக்க எஞ்சின் நகர்த்தப்பட்டபோது, மருதானை பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் எஞ்சினின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இடையிலான ரயில் பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
