பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்து 3 பேரை, அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கைது செய்ததுடன் 8 ரவைகள் 20 வெற்று ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, நேற்று இரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கார் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கிருந்து 8 சொட்கண் ரவைகள் மற்றும் 20 வெற்று ரவைகளை மீட்டதுடன் பாணமை பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இவர்கள் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளதாக அதிரடிப்படையினர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஒப்படைத்துள்ளதாகவும், இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
