Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநகர் கடற்பரப்பில் காணாமல் போன ஒருவர் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக மீட்பு!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகர் – சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த 62 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குருநகர் பகுதியிலிருந்து கடந்த 25ஆம் திகதி கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.

அது தொடர்பில் குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், காணாமல்போனவரை தேடும் பணியில் சக தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று புதன்கிழமை (27) மாலை புங்குடுதீவு 3ஆம் வட்டார பகுதி, கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணைகளின் அடிப்படையில், குருநகர் பகுதியில் இருந்து தொழிலுக்கு கடலுக்கு சென்றவரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘சுரக்சா’காப்புறுதித் திட்டம் விசேட அறிவிப்பு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரம்!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு உதவிய 69 வயது நபர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரண வாக்குமூலம்: முறையான விசாரணை கோருகிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

வைகாசி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube