Quick Tamil News
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து தங்க ஆபரணம் கொள்ளை!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்று சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர். முச்சக்கர வண்டி சாரதி ரிதிதென்னை காட்டு பகுதியில் மயங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (28) சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் சிறிய வைத்தியசாலை முன்பாக உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து வாடகைக்கு சவாரி செய்துவரும் பூநொச்சி முனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வருவதாக உறவினருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து குறித்த முச்சக்கர வண்டியை ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்றுள்ள நிலையில் இரவு 11.00 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து முச்சக்கர வண்டி சாரதியின் உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதி தென்னை காட்டு பகுதியை அண்டிய பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் சாரதி ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் மயக்கத்தில் கிடந்த சாரதியை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்று அவருக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுவிட்டு அவரை காட்டு பகுதியில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மட்டு தலைமையக மற்றும் வாழைச்சேனை பொலிசார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியில் இலங்கையின் நிபுணி வாசனா தங்கம் வென்று சாதனை!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 வெசாக் விழா, விசேட அரச அறிவிப்புகள் மற்றும் ஏற்பாடுகள்.

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்புள்ளையில் காலாவதியான குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்தகருக்கு அபராதம்!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube