Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பஸ் விபத்து – கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்! ​

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31 ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

​இன்று மதியம் மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 11 பெண்களும், 16 ஆண்களும் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களுள் 5 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிறந்தநாள் விழா மோதலில் ஒருவர் உயிரிழப்பு – முக்கிய சந்தேக நபர் கைது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த டிப்பர்கள் – தீவிர விசாரணை

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் 18 வயது இளைஞர்உயிரிழந்தார்!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube