Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம், இன்றைய தினம் (31) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

​கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலந்துகொண்ட பிரமுகர்களினால் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

​தமிழ் பேசும் சமூகத்தின் குரலாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் உண்மை நிலவரங்களை அச்சமின்றி வெளிக்கொணர்ந்த ஒரு மூத்த ஊடகவியலாளராகவும் விளங்கிய நடேசன் அவர்களின் இழப்பு, பிராந்திய ஊடகத்துறைக்கு என்றும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என இதன்போது உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களின் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உனகஹயாய குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி பலி!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கையடக்க   தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறை தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகாதரன் கைது!

வைகாசி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் காலம் முடிவுக்கு வருகிறதாம்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube