Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாதியர் சேவையில் 13,600 பேரை இணைக்க நடவடிக்கை!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2025 – 2029 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதிக்குள் தாதியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று வழங்கப்பட்ட நியமனங்களுடன் அந்த இலக்கின் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ள 2,867 தாதியர் நியமனங்களுடன் 50 சதவீத இலக்கு பூர்த்தியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனித வள தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், 515 அறிவியல் இளங்கலை (BSc) தாதியர் பட்டதாரிகளுக்கு தாதியர் உத்தியோகத்தர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு 07 இல் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவன வளாகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (29) முற்பகல் நடைபெற்றது.

மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட இவர்கள், அரச பல்கலைக்கழகங்கள் மூலம் தாதியர் கௌரவப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதுடன், இலங்கை தாதியர் சேவை அரசியலமைப்பிற்கு அமைவாக ஆறு மாத கால தாதியர் ஆலோசனையூட்டல் மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை நாடளாவிய ரீதியிலுள்ள 31 அரச வைத்தியசாலைகளில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடரில் மாற்றம்!

ஆனி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா வைரசுக்கு 3 தடுப்பூசிகள்!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உறுதியுடன் நிற்போம் – ஈரான்

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ‘WEAIR’ புதிய சரக்கு விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube