சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு சவால்களை எதிர்கொள்ள பாடத்திட்ட மாற்றங்கள் மட்டும் போதாது; ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டுக்கான கல்வி குறித்து உரையாற்றிய அவர், டிஜிட்டல் கல்வியறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் விமர்சன சிந்தனையை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்வியின் நோக்கம் சான்றிதழ்கள் வழங்குவது மட்டுமல்ல; சமூகப் பொறுப்புள்ள மற்றும் தலைமைத்துவத் திறன் கொண்ட குடிமக்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
