15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய,குறித்த சிறுமியின் தந்தையின் சகோதரர் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில், கண்டி, பஹிரவகந்த பகுதியில் வைத்து சந்தேகநபர் கடந்த 2026.05.20 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் முன்னெடுத்து வருகிறது.
