திருச்சியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், QR குறியீடு நுழைவுச் சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனுமதி இல்லாதவர்கள், சிறுவர், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
